The Indian Times

அசுரன் பட கதாநாயகி மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படங்கள்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியார்.அந்த அளவிற்கு சினிமாவில் உயரம் தொட்டுள்ளார்.இவர் முதலில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பாகிய நாடகத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.

இவர் வெள்ளித்திரையில் முதல் முதலில் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சாக்ஷ்யம் என்ற மலையாளப்படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து முழுக்க மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Advertisement

இதுவரை தமிழ் சினிமா பக்கம் வராத இவர்,2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்த நடிப்பினால் தமிழ் சினிமாவையே தனது பக்கம் திரும்ப செய்து,இவரை இத்தனை நாள் உபயோகிக்கவில்லையே என்று இயக்குனர்கள் வருந்தும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தற்போது வினோத் இயக்கத்தில் அஜித்குமாற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் துணிவு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அஜித் உடன் இணைந்து அண்மையில் பைக் ரைடு செய்திருந்தார்.இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இவர் முதல் கணவர் நடிகர் திலீப்.இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார்.மஞ்சு வாரியார் திலீப்பை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.இவர் மகள் மீனாட்சியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in