The Indian Times

என்னங்க VOICE இது….தேவதை பாடினால் இப்படி தான் இருக்கும் போலயே

மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியார்.அந்த அளவிற்கு சினிமாவில் உயரம் தொட்டுள்ளார்.இவர் முதலில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பாகிய நாடகத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் வெள்ளித்திரையில் முதல் முதலில் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சாக்ஷ்யம் என்ற மலையாளப்படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து முழுக்க மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதுவரை தமிழ் சினிமா பக்கம் வராத இவர்,2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த நடிப்பினால் தமிழ் சினிமாவையே தனது பக்கம் திரும்ப செய்து,இவரை இத்தனை நாள் உபயோகிக்கவில்லையே என்று இயக்குனர்கள் வருந்தும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ajith61வது படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.இது இவருக்கு 2 வது தமிழ் படம் ஆகும்.

Advertisement

இவர் சிறந்த நடிகை மட்டுமில்லை சிறந்த பாடகியும் கூட.பல படங்களில் பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார்.இவரது நடிப்பினை போலவே இவரது குரலுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.தற்போது இவர் பாடல் பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது .இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மஞ்சு வாரியாரின் குரலை கேட்டு மெய்மறந்து வருவதாக கருத்துக்களை தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை அல்லி குவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in