The Indian Times

கோடிகளில் குவிந்த திருச்சிற்றம்பலம் படத்தின் முதல்நாள் வசூல்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடித்துள்ளார் திருச்சிற்றம்பலம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.சன் பிக்சர் தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.தனுஷ் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் நான்காவது படமாகும்.இதற்கு முன்னாள் நடித்த குட்டி,யாரடி நீ மோகினி,உத்தமபுத்திரன் படங்கள் பெரும் ஹிட் அடித்தது.இதனால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.இப்படத்தில் நித்யா மேனன்,ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகளாக நடித்துள்ளனர்.பாரதி ராஜா பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இவர்களுடன் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று படத்தினை கண்டு வருகின்றனர்.பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ்புல் ஆக ஓடி வருகிறது.இப்படம் தமிழகத்தில் மட்டும்முதல் நாளில் ரூ. 7.4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in