The Indian Times

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.

Advertisement

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த வாரம் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் வருகிறார்,

உதயநிதி கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு இன்பா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவரது மனைவி கிருத்திகாவும் இயக்குனர் ஆவார்.வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியவர்.

அண்மையில் இவருக்கு வெளியான மாமன்னன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.

தற்போது இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in