The Indian Times

இயக்குனர் மணிரத்தினம் வீட்டின் தீபாவளி விருந்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.

மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.

Advertisement

தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.

இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.

அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன். இப்படத்தினை இயக்கி மாபெரும் வெற்றியும் கண்டார்.

தற்போது தீபாவளிக்கு வீட்டில் விருந்து வைத்துள்ளார்.பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in