The Indian Times

மிருகமாய் மாறி கெட்டவர்களை வெறித்தனமாக கொல்லும் சசிகுமார்.. மிருகமாய் நான் மாற TRAILER இதோ

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் சரி இதனையே தொடர்ச்சியாக சில காலங்கள் செய்வோம் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.அண்மையில் இவருக்கு வெளியாகிய கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் ராஜவம்சம் போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை அளித்தன.இருந்தும் முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார் சசிகுமார்.

Advertisement

தற்போது இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார்.,செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : Think Music India

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in