உண்மையான எலியை வைத்து படமாக்கப்பட்ட Monster திரைப்படத்தின் Making video

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் சரி வில்லனாகவும் சரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சில நடிகர்களால் மட்டுமே சரியாக செய்யமுடியும். அப்படி ஒரு நடிகர் தான் எஸ்.ஜே. சூர்யா. அப்பாவி ஹீரோவாகவும் நடிக்க தெரியும் , மிரட்டல் வில்லனாகவும் நடிக்க தெரியும். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பெரியளவில் வெற்றியடையவில்லை என்றாலும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பிற்காகவே பெரியளவில் பேசப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  WWE ROCK போல் அச்சு அசல் பேசி அசத்திய சுஜா வருணே கணவர் சிவாஜி தேவ்

உண்மையான எலியை வைத்து படமாக்கப்பட்ட Monster திரைப்படத்தின் Making video 1

விளம்பரம்

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு இவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்ட படம் என்றே கூறலாம். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் , பிரியா பவானி ஷங்கர் , கருணாகரன் ஆகியோர் நடித்த இந்த திரைபடத்தில் உண்மையான எலியை வைத்து படத்தை மிக அற்புதமாக எடுத்திருப்பார் இயக்குனர். இதனாலேயே இந்த படம் குழந்தைகளை அதிகமாக கவர்ந்தது.

கட்டாயம் படிக்கவும்  Director ஷங்கர் பொண்ணுடன் மரண குத்தாட்டம் போடும் கார்த்தி

உண்மையான எலியை வைத்து படமாக்கப்பட்ட Monster திரைப்படத்தின் Making video 2

விளம்பரம்

சிறு பூச்சியை கூட துன்புறுத்தாத கதாநாயகன் தன் வீட்டில் இருக்கும் எலியை விரட்ட போராடுவது தான் இந்த படத்தின் கதை சுருக்கம். ஆரம்பத்தில் இந்த படத்தில் எலியின் சி.ஜி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அதற்கு விளக்கமளிக்கும் விதமாக நிஜமான எலியை வைத்து படமாக்கப்பட்ட மான்ஸ்டர் திரைப்படத்தின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

கட்டாயம் படிக்கவும்  காதல் பொங்கி வழிய கணவருடன் நடனமாடிய MYNA NANDHINI

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment