The Indian Times

நீல வானம் பாடலை Reverse ல் பாடி அசத்திய கமல்ஹாசன்! உலகநாயகன் னு சும்மாவா சொல்றாங்க.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி 2021 சட்டமனற்ற தேர்தலில் போட்டியிட்டார்.

வென்றுவிடுவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றொரு வெற்றி படத்தை கொடுக்க விக்ரம் படத்தை கையில் எடுத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது சமீபத்தில் மிகவும் வைரலாகி வருகிறது கமல் பாட்டு பாடிய வீடியோ. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல்ஹாசன் மன்மதன் அம்பு படத்தில் வரும் நீல வானம் பாடலை reverse ல் பாடி அசத்தியிருப்பார். பார்ப்பவர்களுக்கு இவர் வேறு ஏதோ ஒரு மொழியில் பாடலை பாடுகிறார் என்பது போல் தான் தெரியும். ஆனால் அதன் பிறகு அவர் அந்த பாடலுக்கு கொடுத்த விளக்கம் அனைவரையும் ஆச்சரியமூட்டியது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in