The Indian Times

பையா படத்துல யோகிபாபு நடிச்சுருக்காரா? வைரல் புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் தன் எதார்த்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் கவர்ந்திழுத்தவர் நடிகர் கார்த்தி. இவர் நடித்துள்ள அணைத்து படங்களுமே வெவேறு இயக்குனர்களில் இயக்கப்பட்டது தான். எந்த ஒரு இயக்குனருடனும் இரண்டாவதாக கூட்டணி சேராத ஒரே நடிகர் கார்த்தி தான். இவர் தேர்தெடுத்து நடித்த அத்தனை கதைகளுமே வித்தியாசமான கதையம்சத்துடன் இருக்கும்.

Advertisement

இவரது இயல்பான நடிப்பை பார்த்து வியக்காத ஆட்களே இருக்க முடியாது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சுல்தான். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. இந்நிலையில் கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பையா திரைப்படத்தில் யோகிபாபு வில்லகளின் அடியாளாக வரும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

யோகிபாபு வின் வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. ஆரம்பகாலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் யோகிபாபு. சுல்தான் படத்திலும் யோகிபாபு தான் காமெடியனாக நடித்திருப்பார். அதே கார்த்தியின் பைய படத்தில் அடியாளாக நடித்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in