The Indian Times

மனைவி நிக்கியுடன் ROMANTIC DINNER சென்ற நடிகர் ஆதி புகைப்படங்கள்

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.இப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இவர் அ மலையாளம் மற்றும் கன்னட படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார்.

தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.முதல் படமே தமிழ் சினிமாவில் நிக்கி கல்ராணிக்கு நல்ல பெயரை அளித்தது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

Advertisement

அதேபோல் தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பினை பெற்றவர் ஆதி.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.

நிக்கி கல்ராணியும் சினிமா நடிகர் ஆதியும் இணைந்து நடித்த முதல் படம் யாகவா ராயினும் நா காக்க இப்படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பல செய்திகள் வெளியாகியது.

இப்படத்தினை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்தனர்.இப்படம் இருவருக்கும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அண்மையில் திருமணமும் செய்துகொண்டு நட்சத்திர தம்பதிகள் பட்டியலில் இணைந்தனர்

தற்போது இவர்கள் குடும்பத்துடன் இரவு விருந்துக்கு ஹோட்டல் சென்றுள்ளனர்,அப்பொழுது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in