The Indian Times

100 ஏழை குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய சன் பிக்சர்ஸ்…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்,பல வெற்றிப்படங்களை மக்களுக்கு கொடுத்துள்ளது.மேலும் பல பிரம்மாண்ட படங்களையும் தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ளது,அண்மையில் இவர்கள் தயாரிப்பில் வெளியாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று வசூலையும் வாரி குவித்துள்ளது.

Advertisement

இதனால் படத்தின் இயக்குனர்,ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளருக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை இலவசமாக கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் கலாநிதி மாறன்,இந்நிலையில் தற்போது மேலும் ரசிகர்களும் மக்களும் பாராட்டும் வகையில் சன் பிக்சர்ஸ் செய்துள்ள காரியம் ஒன்று அனைவரையும் நெகிழ செய்துள்ளது, தற்போது இந்த நிறுவனம் 100 ஏழை குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளது.

Advertisement

அதன்படி கலாநிதி மாறன் மனைவி காவேரி மாறன் 1 கோடி ருபாய் பணத்தை அப்பல்லோ நிறுவனம் சேர்மன் பிரதாப் ரெட்டியிடம் ஒப்படைத்துள்ளார்.இந்த நிகழ்வுக்கு தங்களது பாராட்டுக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in