The Indian Times

மகன் பாடுவதை கேட்டு தன்னையே மறந்து இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்… பத்துதல படத்தின் SECOND SINGLE PROMO

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.அண்மையில் இவர் இசையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இவர் மீண்டும் சிம்புவின் பத்துதல படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் முதல் பாடல் மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.அந்த வரிசையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான நினைவிருக்கா ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் ஏஆர் ரஹ்மான் தன்னை மறந்து இசையமைத்துள்ளார்.இப்பாடல் வருகிற மார்ச் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாக உள்ளது.இப்பாடலை ஆர் ரஹ்மான் மகன் அமீன் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்கள்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in