The Indian Times

வாங்க சார்… சஞ்சய் தத்தை படப்பிடிப்பிற்கு வரவேற்ற தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

Advertisement

தற்போது லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் இன்று காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.அவரை தளபதி விஜய் கட்டியணைத்து வரவழைத்து அவருடன் தேநீர் அருந்தியுள்ளார்.இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.வீடியோவில் தளபதி லுக் சும்மா வெறித்தனமாக இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வீடியோவை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.மொத்தத்தில் வீடியோவில் சஞ்சய் தத்தை யாரும் கவனிக்கவில்லை அதற்கு பதில் தளபதியை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து வருகின்றனர்.

https://twitter.com/7screenstudio/status/1634495457627099139

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in