The Indian Times

படத்துல சிம்பு ஒண்ணுமே கிழிக்கலை… இது வெத்துதலை.. பத்துதல படத்தினை கிழித்தெடுத்த ப்ளூசட்டை மாறன்

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார். நேற்று இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இப்படத்தினை கண்டு வருகின்றனர்.கன்னடத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த மப்டி படத்தின் ரீமேக் தான் இந்த பத்துதல என்பது அனைவருக்கும் தெரிந்ததே .

Advertisement

இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,விமர்சனத்தில் அவர் கூறியதாவது,ஆரம்பத்தில் நல்ல படத்திற்கு வந்துட்டோம் என நம்பினேன் போக போக தான் தெரிஞ்சது மாட்டிகிட்டோம்னு.படத்துல சிம்பு வில்லனு சொல்லிட்டு கடைசியா அவரை நல்லவன்னு காமிக்காங்க அப்புறம் கவுதம் மேனனை வில்லன் ஆக்கிடுறாங்க,படத்துல ஸ்ட்ராங் ஆன வில்லன் இல்லை. படத்துல சிம்பு ஒண்ணுமே கிழிக்கவில்லை,கேஜிஎப் படம் வந்த பிறகு அவ்வளவு பேரும் சுரங்கத்துல படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க,எல்லா சுரங்கத்தையும் மண்ணை போட்டு மூடிரனும் இல்லனா படம் எடுக்குறேன்னு நம்மள மண்ணை போட்டு மூடிருவாங்க.மொத்தத்துல இப்படம் பத்துதல படம் முழுக்க வெத்து பில்டப் மட்டும் தான் இருக்கு

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in