The Indian Times

படம் வேறலெவல் தாறுமாறு…. ஆஸ்கார் விருதே கிடைக்கும்… விடுதலை PUBLIC REVIEW

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்த நிலையில் இப்பொழுது ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தினை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு களித்து வருகின்றனர்.படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் சூப்பரா இருக்கு அடுத்த பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருக்கிறோம்.விஜய் சேதுபதி சூரி எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க,படத்துல இது பழைய சூரியே இல்லை ரொம்ப சூப்பரா நடிச்சிட்டாரு என படத்தையும் வெற்றிமாறனையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in