The Indian Times

தன்னை பார்க்க ஆசைப்பட்ட குட்டி ரசிகையை வீடியோ காலில் கொஞ்சிய தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

Advertisement

தற்போது லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.இந்நிலையில் தளபதி விஜயின் குட்டி ரசிகை விஜயை பார்க்க வேண்டும் வர சொல்லுங்க என அப்பா அம்மாவிடம் சண்டையிடும் வீடியோ இணையத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆகியது.இந்த வீடியோவை பார்த்த நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தினை தொடர்புகொண்டு குழந்தையுடன் வீடியோ காலில் பேசி குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தும் உள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விஜயினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in