The Indian Times

முதல் நாளே பல கோடிகளை அள்ளிய பத்துதல…. அடேங்கப்பா சிம்பு அசத்திட்டாரே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன். சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் இவர் ஆவார்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார் சிம்பு .பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.இதனால் இவரை அனைவரும் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள். அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர். 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.தற்போது இவர் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து உள்ளார் .இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிவருகிறது சிம்புவின் பத்துதல.இப்படம் நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் அதிகாரபூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in