The Indian Times

கதாநாயகனாக அறிமுகம் ஆகும் பிக் பாஸ் மணிகண்டன்…. அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.இதில் போட்டியாளர்கள் தங்களது முழு திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தனர்.இந்த போட்டியில் பல நாள் உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே சினிமாவில் பெரும் வாய்ப்புகள் கிடைக்கப்படும் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.இதற்குத்தான் அனைவரும் கடுமையாக போராடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிடுகின்றனர்.

Advertisement

கடந்த 6வது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகிய சின்னத்திரை நடிகர் தான் மணிகண்டன்.இவரின் தங்கை தான் தமிழ் சினிமாவை கலக்கும் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவார்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.பல சண்டைகள் சுவாரஸ்யங்கள் விளையாட்டு என அனைத்திலும் மணிகண்டன் புகுந்து விளையாடினார் என்று தான் சொல்ல வேண்டும்.பிக் பாஸ் வீட்டில் 84 நாட்கள் இருந்த நிலையில் இறுதியாக குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement

இந்நிலையில் வெற்றிபெற்ற அசீமுக்கே இன்னும் படம் வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் மணிகண்டனுக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்துள்ளது.மை டியர் டயானா என்ற வெப் சீரிஸில் கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பினை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு துவக்கி வைத்துள்ளார்.மணிகண்டனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை காண்பித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in