The Indian Times

அரபிக்குத்தே ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு இப்படி ஆடுதே… தாறுமாறாக நடனமாடிய அரபிக்குத்து பாடகி ஜொனிட்டா

பிரபல பின்னணி பாடகி ஜோனிட்டா காந்தி.இவருக்கு அரபிக்குத்து பாடலுக்கு பிறகு ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முதல் முறையாக பாடல் பாடி சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் இவர்.இந்த படத்தில் பாடிய பாடலின் மூலம் பாலிவுட் சினிமா கவனத்தினை பெரிதளவு ஈர்த்தார்.இப்பாடலுக்கு பிறகு தொடர்ந்து ஹிந்தியில் பல பாடல்களை பாட தொடங்கினார்.ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ்,தெலுங்கு மட்டும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.இதனால் இவருக்கு அனைத்து மொழிகளிலும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் இவரை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்றிருந்த மெண்டல் மனதில் என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து முழுவது ஹிட் பாடல்களை தான் தமிழில்பாடி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.இவர் பல பாடல்கள் தமிழில் பாடி இருந்தாலும் இவர் மிக பிரபலமாகிய பாடல் என்று சொன்னால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய டாக்டர் படத்தில் உள்ள செல்லம்மா என்ற பாடலை பாடி தான்.இப்பாடலுக்கு பிறகு தான் இவரை பலபேர் அடையாளம் கண்டனர்.இந்த வெற்றியை தொடர்ந்து அனிருத் இசையில் பாடல்களை பாடி வருகிறார் ஜோனிடா.

Advertisement

தற்போது இவர் தளபதி விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார். கடற்கரையில் படத்தில் வருவதை போல துணை நடனம் ஆடுபவர்களுடன் இணைந்து ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் ஜொனிட்டா.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமில் பயங்கர ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in