The Indian Times

பிச்சைக்காரன் படத்தின் ஹீரோயின் தற்போது எப்படி இருக்கிறார்? மகனுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம்

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்த பல படையல்கள் இன்றும் பலரது favourite லிஸ்டில் உள்ளது. அந்தளவிற்கு சிறந்த இசைமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது முதல் படமான நான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. சலீம் , பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களை இவருக்கு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்து கொடுத்தது. பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனி திரைப்படங்களில் மிக முக்கியமான வெற்றி படங்களில் ஒன்று. இந்த படம் தான் விஜய் ஆண்டனியின் நடிப்பு திறமையை மக்களுக்கு காட்டியது .

Advertisement

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாட்னா டைடஸ் நடித்திருந்தார். இவர் இந்த படத்திற்கு பிறகு எய்தவன் மற்றும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் பிச்சைக்காரன் படம் மட்டுமே இவருக்கு புகழை தேடி தந்தது. இவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான மகன் இருக்கிறார். தற்போது இவரது குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in