The Indian Times

திருப்பதியில் ஜோடியாக சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!

Watch the video below தமிழ் சினிமாவின் சிறந்த நடிகையாக லேடி சூப்பர்ஸ்டார் ஆக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன்பு இதே கூட்டணியில் நானும் ரவுடி தான் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். வெட்டிங் முடிந்தது விட்டது என்று நயன்தாரா அதிகாரபூர்வமாக விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கூறினார். அதன் பிறகு இவர்களது ரசிகர்கள் எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டு கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in