The Indian Times

இந்த படத்தை பார்த்தா நமக்கே லாரன்ஸை அடிக்கணும் போல இருக்கு… உக்கார முடியல.. ருத்ரன் மக்கள் கருத்து இதோ

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி. இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது கதாநாயகனாக உயர்ந்து படங்களை நடித்தும் இயக்கியும் வருகிறார்.தற்போது இவர் இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது,மேலும் பாடல்களும் ஹிட் முடித்திருந்தது என்றே கூறலாம்

Advertisement

இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் கூறுவதாவது,படம் நல்லா இல்லை,சண்டை காட்சிகளில் தெலுங்கு படத்தையே தூக்கி சாப்பிட்டு விட்டார் லாரன்ஸ்,முதல் பாதியில் சுமார் 80 பேரை போட்டு அடிக்கிறார்,அதை பார்க்கும் பொழுது நமக்கே கோவம் வந்து லாரன்ஸ் மற்றும் இயக்குனரை அடிக்கணும் போல இருக்கு.உக்கார முடியல படத்துல ரொம்ப மோசமா இருக்கு கதை.படத்துல பாட்டு மட்டும் தான் நல்லா இருக்கு.ரொம்ப குப்பையான படம் இது.என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in