The Indian Times

தலைவா! தலைவான்னு கத்திய ரசிகர்கள்… நீங்க இல்லைன்னா நான் இல்லை.. உணர்ச்சி வசப்பட்ட புகழ்…!

விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவர் புகழ். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் குக் வித் கோமாளிக்கு சென்றார்.
என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கும், இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

Advertisement

இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் , கூடிய விரைவில் அணைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழின் உச்சியில் இருக்கும் புகழ் தனது சமூக வலைதள கணக்குகளிலும் புகழோடு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே! படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்!

Advertisement

நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்து வருகிறது. இவரை கடைத் திறப்பு விழாவிற்க்கும் அழைத்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டையில் ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்ற அவரை சூழந்து கொண்ட ரசிகர்கள் அவரை தலைவா, தலைவா என அழைத்தனர். இதனால் உணர்சி வசப்பட்ட புகழ் நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

https://youtu.be/jfI40reDucg

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in