The Indian Times

நான் sympathy-க்காகவோ வேண்டும் என்றே எந்த விஷயத்தையும் செய்யவில்லை | VJ Archana | Zaara

நமக்கு மிகவும் பிரபலமானவர் VJ அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காமெடி டைம்” என்னும் நிகழ்ச்சியை சிட்டி பாபு அவர்களுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். அதன் மூலம் சின்னத்திரை, வெள்ளித்திரை என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருந்தார். பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட இவர் “அன்பு ஜெயிக்கும் நம்புறியா” என்ற வார்த்தை மூலம் மேலும் பிரபலமானார். பிக்பாஸுக்குப் பிறகு இவரை கலாய்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

Advertisement

வருக்கு சாரா என்ற மகள் உண்டு. அவரும் அர்ச்சனாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். ஆனால் இவர்கள் இருவர் மீதும் நெட்டிசன்கள் பல விமர்சனங்களை வாரி இறைத்து வருகின்றனர்.! சமீபத்தில் இவர்கள் தங்கள் Youtube பக்கத்தில் வெளியிட்ட பாத்ரூம் Tour வீடியோ மிகப்பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோ வெளியான பிறகு நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் கலாய்த்து எடுத்துவிட்டனர். அதன் பிறகு சில காலம் எந்த சர்ச்சரவிலும் சிக்காமல் இருந்து வந்தனர்.

Advertisement

Original source from: zaaravineet official

ஆனால் தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் “தாயில்லாமல் நானில்லை” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். அதற்க்கு வந்த மோசமான கமெண்ட்க்காக “நாங்களும் மனிதர்கள்தான்” நீங்கள் எங்கள் மீது அன்பை கொடுக்க வேண்டாம் ஆனால் வெறுப்பைக் காட்ட வேண்டாம் எனவும் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தார். தற்போது மீண்டும் நான் sympathyக்காகவோ வேண்டும் என்றே எந்த விஷயத்தையும் செய்யவில்லை என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுளார்.. Watch the below video..

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in