The Indian Times

ரட்சிதாவுக்கு மிகப்பெரிய SURPRISE கொடுத்த அம்மா.. இதை விட எதுமே எனக்கு பெருசு இல்லை என நெகிழ்ந்து போன ரட்சிதா

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமாகியவர் ரட்சிதா.நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகினார். அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிய ரட்சிதாவிற்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இந்த தொடரில் மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.இன்றுவரை பலரும் இவரை மீனாட்சி என்று தான் அழைத்து வருகிறார்கள்,அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்துவிட்டார்.

Advertisement

தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னால் முடிந்தவரை விளையாடி மக்களை மகிழ்வித்தார்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து யாரும் எதிர்பாராத வண்ணம் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை கொடுத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்கு வந்த இவருக்கு பல ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் கோலாகலமாக இவரை வரவேற்றனர். மேலும் ரட்சித்தாவின் அம்மாவும் ரட்சிதாவுக்கு கேக் வெட்டி அவரை வரவேற்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு .பிக் பாஸ் ல வெற்றிபெறலைன்னா என்ன எங்களை நீ பெருமை படுத்திட்டே என அம்மா சொன்னாங்க,இத விட எதுமே எனக்கு பெருசில்லை என கூறி நெகிழ்ந்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in