எனக்கு இன்னைக்கு OPERATION … எல்லோரும் எனக்காக PRAYER பண்ணிக்கோங்க .. வாடிய முகத்தில் ஆல்யா மானசா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆதி குண சேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

எனக்கு இன்னைக்கு OPERATION ... எல்லோரும் எனக்காக PRAYER பண்ணிக்கோங்க .. வாடிய முகத்தில் ஆல்யா மானசா 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் கொஞ்சி விளையாடும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் புகைப்படங்கள்

எனக்கு இன்னைக்கு OPERATION ... எல்லோரும் எனக்காக PRAYER பண்ணிக்கோங்க .. வாடிய முகத்தில் ஆல்யா மானசா 2

விளம்பரம்

தற்போது இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.அண்மையில் இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்தார்.இந்நிலையில் அவருக்கு இன்று அறுவை சிகிச்சை என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.மேலும் எனது கணவர் தான் எனது பலமே,அவர் என் மீது அதிக பாசம் வைத்துள்ளார்.அவர் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என நெகிழ்ந்துள்ளார்.இவரின் இந்த பதிவில் ஆல்யா சீக்கிரமாக குணமடைய வேண்டி ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment