The Indian Times

இந்த கோட்டை தாண்டி நீ போலீஸ் வேலைக்கு போகக்கூடாது… சந்தியாவை கடமையை செய்யாமல் தடுத்து நிறுத்திய சிவகாமி.. ராஜா ராணி 2

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

ப்ரோமோவில் சிவகாமி ,போலீஸ் என்கிற வார்த்தையே நான் கேட்க கூடாது,சந்தியா வீட்டை விட்டு எங்கேயும் போக கூடாது என கூற அதே சமயம் சந்தியா வீட்டை விட்டு வெளியே கிளம்ப கடுப்பாகிய சிவகாமி வீட்டுக்குள் கோட்டை போட்டு இதை தாண்டி நீ போக கூடாது என கூறுகிறார்,கடமையா குடும்பமா என குழப்பத்தில் சந்தியா ஒன்றும் புரியாமல் நிற்கிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் சிவகாமியை திட்டி தீர்த்து வருகின்றனர்.ஏன் இப்படி பண்ணுறீங்க சந்தியாவை கடமையை செய்யவிடுங்க என கூறி வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in