The Indian Times

என் வீட்டுக்கு உன் பேரை எப்படி மாத்தலாம் உனக்கு வெட்கமா இல்லை… பாக்கியாவை திட்டி தீர்த்த கோபி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி ப்ரோமோவில் எழில் கோபி வீட்டிற்கு பாக்கியலட்சுமி என பெயர் மாற்ற அதனை பார்த்த கோபி கடுப்பாகி பாக்கியா வீட்டிற்கு வந்து என் வீட்டுக்கு உன் பேரை எப்படி மாற்றலாம் உனக்கு வெட்கமா இல்லை என கூறி பெயர் பலகையை பிடிங்கி தூரே எறிந்துள்ளார்.மேலும் எனக்கு காசு தரேன்னு சொல்லிட்டு இப்போ நீ தரல என கூறி கண்டபடி பேசியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களுக்கு கோபி மேல் அதிக எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in