சமந்தா பங்கேற்ற #dontrushchallenge! இணையத்தை கலக்கி வரும் வைரல் வீடியோ!

அமைதியான தோற்றத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும்
தமிழ் , தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய கஷ்டத்தைப் புரிந்துக்கொள்கிறார்கள் என அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். Watch the video below.

 சமந்தா பங்கேற்ற #dontrushchallenge! இணையத்தை கலக்கி வரும் வைரல் வீடியோ! 1

விளம்பரம்

திருமணமான பின்னர், தற்போது கவர்ச்சிகரமான கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். அதேபோல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிப்ஹாப் பாடல் ஒன்றிர்க்கு ஆடியவாரு பதிவு செய்துள்ளார். இந்த பதிவுதான் இப்போதைய ட்ரெண்டிங் செய்திகளில் ஒன்று. தற்போது #dontrushchallenge என குறிப்பிட்டு தனது நண்பர் அனுஷா சுவாமியுடன் ஆடி பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் தனது இன்ஸ்பைரேஷன்னு குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரும் இந்த #dontrushchallenge ல் பங்கேற்று பதிவு செய்ததது குறிப்பிடத்தக்கது. யோகா, ஒர்க் அவுட், கார்டனிங் என தனக்கு பிடித்த காரியங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இணையத்தை கலக்கி வரும் அந்த வீடியோ லிங்க் கீழே!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment