நாங்க இப்போவும் போல எப்போவும் சந்தோசமா இருக்கனும்…முதல் திருமண நாளுக்கு கோவில் வந்த ஸ்ரேயா சித்து

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உன் பையனுக்கெல்லாம் என்னால காபி போட முடியாது... ஈஸ்வரியை எதிர்த்து பேசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி

நாங்க இப்போவும் போல எப்போவும் சந்தோசமா இருக்கனும்...முதல் திருமண நாளுக்கு கோவில் வந்த ஸ்ரேயா சித்து 1

விளம்பரம்

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நிறை மாதத்தில் வீட்டில் கீழே தவறி விழுந்த ஜெனி... மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராதிகா... பாக்கியலட்சுமி

நாங்க இப்போவும் போல எப்போவும் சந்தோசமா இருக்கனும்...முதல் திருமண நாளுக்கு கோவில் வந்த ஸ்ரேயா சித்து 2

விளம்பரம்

சித்துவும் ஸ்ரேயாவும் தங்களது முதல் திருமணநாளை கொண்டாடியுள்ளனர். மனைவியை கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் அங்கிருந்து ஹோட்டலுக்கு அழைத்து சென்று SURPRISE கொடுத்துள்ளார் சித்து.இதனை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ஜோடிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த வீடியோவை பாதியிலேயே சித்து முடித்துள்ளதால்,என்ன SURPRISE கொடுத்தார் என்பதை அடுத்த வீடியோவில் காண்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி ஜெனியின் செம்ம CUTE-ஆன அழகிய புகைப்படங்கள் இதோ...

விளம்பரம்

Embed video credits : SIDHU AND SHREYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment