The Indian Times

பிரியாணில எறும்பு பொடியா? சித்துவுடன் பிரியாணி செய்த ஸ்ரேயா Cute வீடியோ | Sidhu Shreya

நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சின்னத்திரை ஜோடிகளில் ஒருவர்தான் சித்து – ஸ்ரேயா. இவர்கள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்கள். தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர் எனவே இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயாவிற்கு பிரியா என்ற தங்கை உண்டு. சித்து தனது மச்சினிச்சி பிரியாவுடன் சேர்ந்து செய்யும் லூட்டிகள், மனைவி ஸ்ரேயாவுடன் செய்யும் ரொமான்ஸ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவது வழக்கமான ஒன்றுதான்.

Advertisement

நடிகர் சித்து தற்போது ராஜா ராணி 2 என்ற தொடரில் நடித்து வருகிறார்.  இது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழ் நாடகத் தொடராகும். இந்த நிகழ்ச்சி 2 சீசன்களைக் கொண்டுள்ளது. முதல் சீசனில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடித்தனர்,  இரண்டாவது சீசன் இந்தி சீரியலான தியா அவுர் பாத்தி ஹம் ஸ்டார்பிளஸின் ரீமேக் ஆகும். இதில் நடிகர் சித்து சித்துடன் முதல் சீசனில் தோன்றிய ஆல்யா மானசா நடிக்கிறார். Youtube Video Embed Code Credits: Cineulagam

Advertisement

சித்து ஸ்ரேயா ஆகியோர் இணைந்து பிரியாணி செய்கின்றனர்..அப்போது குரேஷி பிரியாணி செய்ய என்ன என்ன பொடி எல்லாம் போடுவீர்கள் என்று கேட்க இங்கு வைத்து இருந்து அனைத்து பொடியும் போட்டேன் என்று கூறுகிறார். அந்த cute couples-ன் வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in