The Indian Times

ஹிஜாப் அணியலாமா என்று நானே நினைத்துள்ளேன் | Lakshmi Ramakrishnan

லட்சுமி ராமகிருஷ்ணன் என்றாலே நம்மக்கு ஞாபகம் வருவது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிதான். இவர் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உண்டு. இவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். இவர் பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் குறிப்பாக சொன்னால் நாடோடிகள் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு அம்மாவாக நடித்துள்ளார். வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜயின் அம்மாவாக நடித்துள்ளார்.சென்னையில் ஒருநாள் திரைப்படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்துள்ளார்.

Advertisement

இவரை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பின் நெட்டிசன்கள் மிகவும் கலாய்த்து தள்ளினர். இவரின் “என்னமா இப்படி பண்றீங்களேமா”, போலீசை கூப்பிடுவேன் என்ற வசனங்களை வைத்து பாட்டுகள் கூட வந்தன. நடுவில் இவருக்கும் வனிதாவுக்கும் சண்டை ஏற்பட்டது. 4வது கணவர் விவகாரத்தில் கருத்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணனை வறுத்து எடுத்துவிட்டார் வனிதா. அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சிகளையோ பேட்டிகளிலோ இவர் கலந்து கொள்ளவில்லை.

Advertisement

தற்போது கர்நாடகாவில் ஹிஜாப் அணிய கூடாது என்று இஸ்லாமிய பெண்களை கட்டாயப்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் லட்சுமி ராமகிரிஷ்ணன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..அதில் நானும் 22 ஆண்டுகள் இஸ்லாமிய நாட்டில் வசித்துள்ளேன் எனவும், ஹிஜாப் அணிவது பாதுகாப்பான ஒரு உணர்வை தரும் என்றும், நானும் சில சமயங்களில் ஹிஜாப் அணியலாமா என்று கூட யோசித்துள்ளேன் என்று கூறியுள்ளார்..இவர் கூறிய இந்த கருத்தை பலரும் வரவேற்று உள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in