The Indian Times

என்னயா நான்சென்ஸ் மாறி பண்றிங்க? ஹிஜாப் விஷயத்தில் கடுப்பான ஷிவாங்கி | Sivaangi

நம்ம எல்லோருக்கும்,பிடித்த ஷோனா அது குக் வித் கோமாளி தான். காமெடி, கலாட்டா, சிரிப்பு என்று அந்த நிகழ்ச்சியை பார்க்கும் எல்லோர் முகத்தில்லும் சிரிப்பு வரும் அளவுக்கு கோமாளிகளும் குக்களும் இணைந்து ரகளையே நடக்கும். வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

Advertisement

இதில் நம் அனைவருக்கும் பிடித்தமானவர் என்றால் அது ஷிவாங்கி தான். முதலில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட அவர் பிறகு கோமாளியாக அறிமுகமானார். அவரின் குரல் பாடும் போதும் பேசும் போதும் வித்தியாசமாக இருந்ததால் விமர்சிக்கபட்டார். அனால் குக் வித் கோமாளி வந்த பிறகு இவருக்கு செல்வாக்கு உயர்ந்தது. இவர் செய்யும் பல குறும்பு வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். Original source from: sivaangi krish instagram page

Advertisement

தற்போது கர்நாடகாவில் ஹிஜாப் அணிய கூடாது என்று இஸ்லாமிய பெண்களை கட்டாயப்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் ஷிவாங்கி ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார்..அதில் பள்ளியில் படிக்கும்போது பக்கத்தில் இருப்பவர் இஸ்லாமியரா கிறிஸ்துவரா என்று நாம் பார்ப்பதில்லை. யார் நன்றாக படிப்பார்கள், யார் நன்றாக விளையாடுவார்கள், யார் கொண்டு வரும் மதிய உணவு நன்றாக இருக்கும் என்று தான் பார்ப்போம். இந்த ஹிஜாப் அணிய கூடாது என்ற முட்டாள் தானம் எங்கிருந்து தொடங்கியது என்று கேட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in