The Indian Times

Yuvan பிறந்தநாளை முன்னிட்டு மேடையில் லூசு பெண்ணே பாடலை பாடிய Simbu!

சிறு வயதிலேயே சினிமாவிற்குள் லிட்டில் சூப்பர்ஸ்டாராக என்ட்ரி கொடுத்து , இன்று பல ரசிகர்களை கவர்ந்து STR ஆக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார் சிம்பு. இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து

கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். இதுபோக தற்போது இவர் நடிப்பில் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதோடு கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இன்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் சிம்பு.

Advertisement

அதோடு அங்கு மேடையில் சிம்பு லூசு பெண்ணே பாடலை பாடி அசத்தினார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு போதையே ஏற்றும் என்று கூறுவார்கள். இந்நிலையில் தற்போது யுவன் பிறந்தநாளுக்காக சிம்பு பாடிய பாடல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in