சினம் கொண்ட சிங்கமாக அருண் விஜய் நடித்து அசத்தும் சினம் TRAILER

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கினார்.இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.இறுதியாக இவரின் முயற்சிக்கு பலனாக கவுதம் மேனன் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியாவுக்கு எதிராக ஹோட்டல் திறந்த கோபி.. பாக்கியா ஹோட்டலில் கூட்டம் இல்லாததால் சோகம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

சினம் கொண்ட சிங்கமாக அருண் விஜய் நடித்து அசத்தும் சினம் TRAILER 1

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர் விடுமுறை கொண்டாட்டம்

சினம் கொண்ட சிங்கமாக அருண் விஜய் நடித்து அசத்தும் சினம் TRAILER 2

விளம்பரம்

தற்போது அருண் விஜய் இயக்குனர் குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை மூவி ஸ்லைட் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக பல்லக் லால்வானி நடித்துள்ளார்.இவர்களுடன் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்து அசத்தியுள்ளார்.செப்டெம்பர் 16 இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  செம்ம மாஸாக மாறிய VIJAY TV GABY-ன் கலக்கலான புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : MUZIK247

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment