The Indian Times

துருவ் எங்கே..எங்கே..மகனை திரையரங்கு வாசலில் தேடிய விக்ரம்

நடிப்பின் அரக்கன் என்றால் நடிகர் விக்ரமை சொல்லலாம்.காரணம் அந்தளவிற்கு நடிப்பின் மேல் வெறிகொண்டவர்,நடிப்பிற்காக எந்த அளவிற்கும் செல்ல கூடியவர் இவர்.உதாரணமாக சொல்ல போனால் ஐ படத்தில் விக்ரம் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் அந்த அளவிற்கு உடல் எடை மெலிந்து நடித்துள்ளார்.இதை விட இவர் நடிப்பின் அரக்கன் என்று சொல்வதற்கு வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.ரசிகர்கள் சீயான் என செல்லமாக அழைத்து இவரை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.இவர் எந்த படத்தில் நடிக்கிறாரோ அந்த படத்தின் கதாபாத்திரமாக அப்படியே மாறிவிடுவார்.எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே இன்று இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்

Advertisement

தற்போது விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள கோப்ரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.அதிகாலை 4 மணி முதலே காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.இன்று சென்னையில் ரசிகர்களுடன் இப்படத்தினை காண விக்ரம் தனது மகன் துருவ் உடன் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார்.படம் முடிந்து வெளியே வரவும் துருவை காணாததால் பதட்டத்தில் விக்ரம் துருவ் எங்கே எங்கே என அங்கிருப்பவர்களிடம் கேட்டுக்கொன்டே வந்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : Indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in