The Indian Times

3 மணி நேரம் அறுத்துட்டாங்க..படம் நல்லா இல்லை..கோப்ரா PUBLIC REVIEW

நடிகர் விக்ரம் நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் என்பது தமிழ் சினிமாவே அறிந்த ஒன்றே.திரைத்துறையில் நுழைவதற்கு முன்பே 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொடரில் நடித்துள்ளார்.அதன்பின்பு முதல் முதலாக 1990 ஆம் ஆண்டு வெளியாகிய என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் பல படங்களில் நடித்தும் இவருக்கு எதிலும் கிடைக்காத வரவேற்பு பாலா இயக்கிய சேது படத்தில் கிடைத்தது.இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.இவருக்கென ரசிகர்கள் கூட்டம் இப்படத்திற்கு பிறகு சேர்ந்தது.இந்த படத்தில் இருந்துதான் விக்ரம் சீயான் என்ற பட்டத்தினையும் பெற்றார்.

Advertisement

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்துள்ளார் ,இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.இந்த படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணி முதலே ரசிகர்கள் படத்தினை ஆவலாக கண்டு வருகின்றனர்.படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை படத்திற்கு கொடுத்து வருகின்றனர்.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் 3 மணி நேரம் இழுத்துட்டாங்க,படம் நல்லா இல்லை,விக்ரம் நடிப்பு நல்லா இருக்கு சொல்றதுக்கு வேறே ஓன்னும்ம் இல்லை என நெகட்டிவ் ரிவியூ கொடுத்து வருகின்றனர்.

Embed video credits : Cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in