The Indian Times

சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார்?? – அச்சத்தில் ரசிகர்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடித்து வெளியான படம் தான் அண்ணாத்தே! இந்த படத்தில் 80 மற்றும் 90களில் ரஜினிகாந்துக்கு ஜோடி போட்டு நடித்த சூப்பர் டூப்பர் கதாநாயகிகளான மீனா மற்றும் குஷ்பூ மற்றும் தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ், பாண்டியராஜ், சூரி, லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ், சதிஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து தீபாவளிக்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் படம் தான் அண்ணாத்தே!

Advertisement

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு தலைவரின் மாஸ் நிறைந்த சண்டை காட்சிகள் ஆங்காங்கே வந்து பட்டையை கிளப்ப, மீனாவும், குஷ்பூவும் மாறி மாறி காதல் மழையை முறை மாமனான ரஜினிகாந்த் அவர்கள் மேல் பொழிய 80களை கலக்கிய ரஜினியை பார்த்தது போல் உள்ளது என பலரும் பூரித்த வண்ணம் உள்ளனர்! ஆனாலும், சினிமா ரசிகர்கள் பலரும் அண்ணாத்தே படம் தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் பழைய கதை என்றும் புலம்பி வந்த வண்ணம் உள்ளனர்!

Advertisement

இருந்தாலும் வழக்கம் போல சூப்பர்ஸ்டார் படத்தின் முதல்நாள் வசூலை வழக்கம் போல ஒவ்வொரு முறையும் அவரே தான் அவரது சாதனையை முறியடித்து வருகின்றார்! இந்நிலையில் இந்த வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா அவர்களுடன் மீண்டும் இணைந்து ஒரு படம் ஒப்பந்தமிட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது!அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டும்!

சிறுத்தை சிவா அவர்கள் ரஜினியோடு மீண்டும் அவருடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என விண்ணப்பிக்கும் ஆடியோவையும் கேளுங்கள்!

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in