சிவகார்திகேயனோடு கலக்க வரும் சிவாங்கி! கலக்கலான டான் திரைப்பட போஸ்டர்! SivaKarthikeyan’s DON Movie First Look

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து மக்களின் பேராதரவோடும் கடின உழைப்பாலும் உயர்ந்து முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்! குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நட்சத்திரமாக வருகிறார் என்றால் அது மிகையாகாது! அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இவரை பிடிக்காமல் இருக்கவே இருக்காது! ஆபாச காட்சிகள், இரட்டை வசனங்கள், அரசியலென சர்ச்சையூட்டும் காட்சிகள் இவர் படத்தில் நாம் பார்க்கவே முடியாது!

கட்டாயம் படிக்கவும்  கட்டாயம் பண்ணுங்க...ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த SUPER STAR ரஜினிகாந்த்

சிவகார்திகேயனோடு கலக்க வரும் சிவாங்கி! கலக்கலான டான் திரைப்பட போஸ்டர்! SivaKarthikeyan's DON Movie First Look 1

விளம்பரம்

முழுக்க முழுக்க பொழுதுபோக்கையும் சமூக நலன் சார்ந்த கருத்துகளையும் மட்டுமே மையமாக வைத்து ரசிகர்களை மகிழ்விக்கும் எண்ணத்தில் மட்டுமே படங்களை எடுத்து வருகிறார்! சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, பாடகராக என பல பரிணாமங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்! நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டே இருக்கிறது என்றால் அது மிகையல்ல! கொரோனா பேரலைக்கு பிறகு வெளியான இந்திய படங்களில் முதல் முறையாக 100 கோடி வசூலீட்டியது இவர் நடித்து வெளியான டாக்டர் திரைப்படம் தான்!

கட்டாயம் படிக்கவும்  ரித்திகா சொன்ன உடனே புஷ்பா பாடலுக்கு CUTE-ஆக நடனமாடிய குழந்தை

சிவகார்திகேயனோடு கலக்க வரும் சிவாங்கி! கலக்கலான டான் திரைப்பட போஸ்டர்! SivaKarthikeyan's DON Movie First Look 2

விளம்பரம்

இப்பொழுது சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி மற்றும் டாக்டர் திரைப்பட ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் மற்றும் பல நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்து நடித்து வரும் டான் திரைப்படத்தின் முதல் லுக் வெளியாகியுள்ளது! சமூகவலைத்தளங்களில் தீப்போல பரவி வரும் டான் திரைப்படத்தின் முதல் லுக்கை நீங்களும் பார்த்து மகிழுங்கள்!

கட்டாயம் படிக்கவும்  Swiggy ஓட்டிக்கொண்டு இரண்டு பெண்களை ROUTE அடிக்கும் தனுஷ்...THIRUCHITRAMBALAM TRAILER

சிவகார்திகேயனோடு கலக்க வரும் சிவாங்கி! கலக்கலான டான் திரைப்பட போஸ்டர்! SivaKarthikeyan's DON Movie First Look 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment