வீட்டில் பொங்கல் வைத்து மனமுறுகி சாமியை வணங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

வீட்டில் பொங்கல் வைத்து மனமுறுகி சாமியை வணங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.இவருக்கு அடுத்ததாக நாணி நடிப்பில் தசரா படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

வீட்டில் பொங்கல் வைத்து மனமுறுகி சாமியை வணங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் அவரது வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளார்.மேலும் நடிகை பிரியங்கா மோகனையும் பொங்கல் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்.இருவரும் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர்.இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் கீர்த்தி சுரேஷுக்கு தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

வீட்டில் பொங்கல் வைத்து மனமுறுகி சாமியை வணங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment