The Indian Times

அட இதான் நம்ம நடிகர் சமுத்திரக்கனி அண்ணன் குடும்பமா… குடும்பத்துடன் சேர்ந்து பொங்கலை கோலாகலமாக கொண்டாடிய சமுத்திரக்கனி

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கி வருபவர் சமுத்திரக்கனி.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை கனகச்சிதமாக நடித்து கொடுப்பவர் என்பதால் தற்போது இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது. எந்தளவுக்கு என்றால் இவர் இயக்குனர் என்பதே மறந்து நடிகராக ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர்.இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜயகாந்தை வைத்து நெறஞ்ச மனசு என்ற படத்தினை இயக்கினார்.எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

Advertisement

இறுதியாக 2009 ஆம் ஆண்டு சசிகுமாரை வைத்து இவர் இயக்கிய நாடோடிகள் படம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் சமுத்திரக்கனி.இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார்.பின்னர் இவர் சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து சினிமாவிற்குள் களம் இறங்கினார்.இந்த படம் இவருக்கு நடிகராகவும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.அதனை அப்படியே பிடித்துக்கொண்டு இன்றுவரை படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது அஜித்தின் துணிவு படத்தில் கூட சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு நடிகர் சமுத்திரக்கனி,தனது மனைவி,மகன் மற்றும் மகள் உடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,இந்த புகைப்படத்தில் இருக்கும் அவரது மகள் மற்றும் மகனை சமுத்திரக்கனி ரசிகர்களை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்,சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய பசங்களா என ஆச்சரியமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in