The Indian Times

தாடி மீசையுடன் செம்ம மாஸான வீடியோவை வெளியிட்ட சிம்பு!

சிறு வயதிலேயே சினிமாவிற்குள் லிட்டில் சூப்பர்ஸ்டாராக என்ட்ரி கொடுத்து , இன்று பல ரசிகர்களை கவர்ந்து STR ஆக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார் சிம்பு. இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து

கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா

Advertisement

இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கம் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சிம்பு. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=X0KgUV2qhbs

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in