வலிமை பட கெட்டப்பில் Helicopter பறக்கவிட்ட தல அஜித் வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான். இது போக கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி தக்ஷா ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் உலக சாதனை படைத்தார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

https://www.youtube.com/watch?v=Mzb59tzf9A0

விளம்பரம்

விசுவாசம் படப்பிடிப்பு முடிந்தவுடன் வெளிநாடு சென்று aero modelling கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு ஆலோசகராக பணியாற்றியது மிகவும் பாராட்டிற்குரிய நிகழ்வாக திகழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்தார். இதன்மூலம் தமிழகத்தின் 46 வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு 3 தங்க பதக்கம் உட்பட 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார் அஜித்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

வலிமை பட கெட்டப்பில் Helicopter பறக்கவிட்ட தல அஜித் வைரல் வீடியோ! 1

விளம்பரம்

இந்த சாதனையை தொடர்ந்து தற்போது தல அஜித் வலிமை பட கெட்டப்பில் aircraft ஒன்றை உருவாக்கி அதை பறக்க விடும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் தல அஜித் ஒளித்து வைத்திருக்கும் பல திறமைகளை வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment