The Indian Times

மயில்சாமி உடலை பார்த்து உறைந்து நின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…. மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த சூப்பர் ஸ்டார்

நடிகர் மட்டுமில்லாமல் நல்ல மனிதர் தேடி சென்று வேண்டுபவர்களுக்கு உதவி செய்பவர் மயில்சாமி.இவரின் நகைச்சுவை இன்று வரை பலரையும் சிரிக்க வைத்து வருகிறது.அந்தளவு தனது நடிப்பினால் மக்களை அதிகம் கவர்ந்திழுத்தவர் மயில்சாமி.பிறருக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக ஓடி நன்மை செய்பவர் இவர்.சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார்,இவர் நல்ல கலைஞனும் கூட,மிமிக்ரியில் அசத்தும் ஒரு மகா கலைஞன் மயில்சாமி என்று கூறினால் மிகையாகாது.தற்போதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் மயில்சாமி இன்று நெஞ்சு வழியால் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.இன்று அதிகாலை 3:30 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார்,அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த செய்தி தமிழ் சினிமா நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது.பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மயில்சாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமி இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.மேலும் மயில்சாமியின் உடலை பார்த்து உறைந்து நின்றுள்ளார் ரஜினிகாந்த்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,மிமிக்ரி ஆர்ட்டிஸ்டா இருந்து சினிமாவுக்கு வந்தவர்,அவர் எம்ஜிஆர் ரசிகர் மேலும் சிவ பக்தர் கூட,அவர் எப்பொழுதும் இரண்டு பேர் பற்றித்தான் பேசிக்கொண்டு இருப்பார்.கார்த்திகை தீபத்துல இருந்து போன் செய்வார்,கடந்த முறை போன் செய்யும் பொழுது நான் எடுக்கவில்லை ,அதற்கு அவரிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவரின் கடைசி ஆசையை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.

Embed video credits : Thanthi TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in