The Indian Times

மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து காலி செய்த தனுஷின் வாத்தி.. கோடிகளில் குளிக்கும் வாத்தி பட வசூல்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.

Advertisement

இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் சினிமாவில் கொடிகட்டி பறக்க தொடங்கினார்.தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் உயர்ந்துள்ளார் மேலும் பாலிவுட்டில் இருந்து தற்போது ஹாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் கலக்கு கலக்கி வருகிறார் தனுஷ்.தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நல்ல கருத்தை மக்களுக்கு எடுத்து சொல்லியுள்ளதாக ரசிகர்கள் இயக்குனரையும் தனுஷையும் பாராட்டி வருகின்றனர்.நாளுக்கு நாள் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து தான் செல்கிறது.குடும்பம் குடும்பமாக படத்தினை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.இப்படம் வெளியாகிய 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 51 கோடி வரை வசூலை பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உச்ச மகிழ்ச்சியில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in