The Indian Times

கோலிவுட்டின் முதல் SUPER HERO.. ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.முதல் படகிலேயே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி

Advertisement

தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய அன்பறிவு படம் இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.இப்படம் திரையில் இறங்கி இருந்தால் இவர் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்லும் அளவிற்கு மோசமாக அமைந்தது.இதற்கு பின்னர் தற்போது ஆதி கதைகளை கேட்டு ஆராய்ந்து அதில் நடித்து வருகிறாராம்.அதன்படி தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

அதன்படி தற்போது மரகதநாணயம் பட இயக்குனர் ஆர்க் சரவணன் இயக்கத்தில் வீரன் படத்தில் நடித்து வருகிறார்.சத்திய ஜோதி நிறுவனம் ஆனது இப்படத்தினை தயாரித்துள்ளது.படத்திற்கு இசையும் ஹிப் ஹாப் ஆதியே இசையமைக்கிறார்.இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.போஸ்டரை பார்க்கும் பொழுதே ஹிப் ஹாப் ஆதி சூப்பர் பவர் உடையவர் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.போஸ்டர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in