The Indian Times

ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய தளபதி விஜய்! என்ன செய்தார் தெரியுமா

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது. கொரோனா பாதிப்பால் வெறும் 50 சதவீத இருக்கையில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்து அசத்தியது.

Advertisement

ஓ.டி.டி யில் வெளியான பிறகும் திரையரங்கில் கூட்டம் குறையாமல் வசூலை குவித்தது மாஸ்டர் திரைப்படம். பிரம்மாண்ட வெற்றியை அடுத்து தற்போது மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. சமீபத்தில் தளபதி ஜார்ஜியாவிற்கு விமானத்தில் செல்லும் விடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

Advertisement

அது மட்டுமில்லாது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஜார்ஜியாவில் விஜயின் ரசிகை ஒருவர் அவரை சந்தித்துள்ளார். அவரரிடம் நலம் விசாரித்து autograph போட்டு கொடுத்துள்ளார் தளபதி. தற்போது அந்த ரசிகை இந்த சம்பவம் தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத சம்பவம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.

https://twitter.com/Itz_Master7/status/1386332136643260419

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in