The Indian Times

அந்தகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய யோகி பாபு, பிரஷாந்த் !

கோலிவுட்டில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக இருந்தவர் நடிகர் பிரஷாந்த். பல தோழ்விகளை கடந்து நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பிரசாந்த் ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சாக்லட் பாயாக உருமாறியுள்ளார் பிரஷாந்த்.

Advertisement

இந்த படத்தை முதலில் மோகன் ராஜா இயக்கப்போவதாக தகவல் வெளியானது.அதன் பிறகு இந்த படத்தை பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் இயக்க போவதாக தகவல் வந்தது. தற்போது கடைசியாக பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இந்த படத்தை இயக்கி வருகிறார். தியாகராஜன் சமீபத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் , இவர் இயக்கத்தில் வெளிவந்து படம் வெற்றி பெற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

Advertisement

தற்போது இவர்கள் இருவருமே ஒன்றாக இனைந்து கம்பாக் தருவதால் படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாது இந்த படத்தில் சிம்ரன் , யோகிபாபு , பிரியா ஆனந்த் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரஷாந்த் , யோகி பாபு , இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in