The Indian Times

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய சகுனி பட கதாநாயகி ப்ரணிதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரணிதா,இவர் பொற்கி என்ற கன்னட சினிமாவில் நடித்து திரை உலகில் நுழைந்தார்.அதன்பின்னர் இரண்டாவது படமான எம் பில்லோ எம் பில்லடோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

தனது முதல் இரண்டு படங்களிலேயே இரண்டு மொழி சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிய ஒரே நடிகை இவர் தான்.பின்னர் 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய உதயன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியுடன் இணைந்து சகுனி, மாஸ் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

அதன்பின்னர் தமிழில் சரிவர படங்கள் அமையாததால் மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் தான் காதலித்து வந்த பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜ் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் ப்ரணீதா.

இந்நிலையில் இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது குழந்தை குடும்பம் என அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in