The Indian Times

இவ ஒரு கொலைகாரி… அப்பாவுக்கு சடங்கு செய்யவந்த அபியை அசிங்கப்படுத்திய வெற்றி… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த தொடரின் மூலம் இருவரும் தமிழக மக்களின் இதயத்தில் தனி இடத்தினை பிடித்துள்ளார்கள் எனலாம்,அந்தளவிற்கு கணவன் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார்கள்,தற்போது இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் 6 வருடத்திற்கு பிறகு உண்டான கதையை ஆரம்பித்துள்ளது படக்குழு.6 வருடத்திற்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளிவருகிறார் வெற்றி.தனது குழந்தையை மனைவி அபி கலைத்துவிட்டதால் வெறிபிடித்த மிருகம் போல் மாறுகிறார்.தற்போது இவர் ஜெயிலில் இருந்து வெளிவந்துள்ளார்.

அதே சமயம் மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் வெற்றி தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்து வரும் நிலையில் அதில் கலந்துகொள்ள அபி வரவே,அவரை பார்த்து கடுப்பாகிய வெற்றி இவர் ஒரு கொலைகாரி இவளுடன் என் அப்பாவுக்கு நான் சடங்கு செய்வதா என கேட்டு சண்டையிட்டுள்ளார்,இதனால் ஆத்திரத்தில் அபியும் வெற்றியுடன் சண்டையிட்டுள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in